![]() |
| Tune Glitz Logo |
முன்னுரை:
Startup என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலேயே பலரும் தாங்கள் தொடங்கும் தொழிலுக்கு startup என அழைக்கிறார்கள். உண்மையில் startup என்ற வார்த்தையை உங்கள் தொழிலுக்கு பயன்படுத்த வேண்டும் என்றால் அந்த தொழிலானது இதற்கு முன்னதாக இதே தொழிலை செய்த மத்த நிறுவனங்கள், அந்தத் தொழிலில் நுகர்வோருக்கு இருந்த சில பிரச்சனைகள் குறைந்தது ஒரு பிரச்சினையவாவது தீர்த்து அந்த தீர்வையே தங்களது நிறுவனத்தின் சிறப்பு அம்சமாகக் கொண்டு வியாபாரமாக வழங்கும் நிறுவனமே startup என சொல்லிக்கொள்ள தகுதி உடையதாகும்.
அந்த வகையில் உங்களிடம் எனது Startup தொழிலான "Tune Glitz" நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் அடைகிறேன்.
Hi Iam Rishokan, founder of "Tune Glitz"
கலைஞர்களின் பிரச்சனைகள்:
- இந்திய சினிமாவால் Independent Artist-க்கு ஏற்பட்டிருக்கும் சீரழிவு.
- லேபிள் நிறுவனங்களின் கலைஞர்களுக்கு நடக்கும் உரிமை திருட்டு.
- கலைஞர்களின் அறியாமை.
- லேபிள் நிறுவனங்களின் சூழ்ச்சி.
- Reality Shows-கலால் புறக்கணிக்கப்படும் Indie Artists.
- Music Concert-இன் மற்றொரு சோக பக்கம்.
1 பிரச்சனை:
எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் நான் பார்த்த, கேட்ட பாடல்கள் அனைத்தும் சினிமா படங்களில் வரக்கூடிய பாடல்கள் தான். ஆனால் தற்போது இன்டர்நெட் பயன்பாட்டின் ஆதிக்கத்தால் உலகம் முழுவதும் அயல்நாட்டு படங்களையும் பார்த்து ரசிக்க கூடிய வாய்ப்புகள் ஒரு சாமானியனுக்கு கிடைத்துவிட்டது. அந்த வகையில் சாமானியர்களில் ஒருவன் Rishokan ஆகிய நான், எனக்குத் தெரிய வந்த உண்மை என்னவென்றால் வெளிநாட்டு படங்களில் இந்திய படங்கள் மாதிரியான பாடல் காட்சிகள் எதுவுமே கிடையாது. நான் பார்த்த அனைத்து ஹாலிவுட் திரைப்படங்களும் பாடல் காட்சி என்ற ஒரு விஷயமே இல்லை, அது ஏன்? பின்னர் தான் புரிய வந்தது. திரைப்படங்களுக்கு பாடல் காட்சி என்பது அவசியம் அற்றது ஏனென்றால் திரைப்படம் கற்பனை கதை கொண்டு கதாபாத்திரங்கள் நடித்து உருவாக்கப்பட்ட நிழல்களாக இருந்தாலும் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் உண்மையிலேயே நடப்பதை போன்று உணர வேண்டும், அதற்கு உண்மையான வாழ்க்கை போன்று realistic ஆக இருக்க வேண்டும். அந்த வகையில் நாம் அனைவரும் வாழ்கின்ற இந்த உண்மையான உலகத்தில் சூழ்நிலைகளுக்காக பாடல்களை பாடி ஆடிக்கொண்டிருக்க மாட்டோம். இதைப் புரிந்து கொண்டு அயல்நாட்டு இயக்குனர்கள் பாடல் காட்சிகள் என்ற ஒரு விஷயத்தை படத்தில் வைப்பதில்லை. இதிலிருந்து இந்திய சினிமா எப்படி வேறுபடுகிறது என்றால் உலகம் முழுவதும் உள்ள சினிமா தெருக்கூத்தில் இருந்துதான் பரிணாமம் அடைந்தது ஆனால் அயல்நாட்டு இயக்குனர்கள் பரிணாமத்திற்கு ஏற்ற மாற்றங்களை சினிமாவில் உருவாக்கிக் கொண்டனர், இந்திய இயக்குனர்கள் அந்த மாற்றத்தை மறுக்கும் வகையில் கண் முன்னே சில படங்கள் பாடல்களால் மட்டுமே ஓடியதை பார்த்து தொடர்ந்து பாடலை படங்களின் அங்கமாக பயன்படுத்திக் கொண்டனர். விளைவு இன்று வரையும் கூட realistic-காக கோடி கோடியாக செலவு செய்து CGI, VFX செய்தாலும் குண்டா சட்டியில் குதிரை ஓட்டும் கதை போன்று பாடல் இந்திய சினிமாவின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் 2008 ஆம் ஆண்டு வெளியான Slumdog Millionaire என்கிற திரைப்படம். இந்த திரைப்படமானது ஒரு UK இயக்குனரால் எடுக்கப்பட்டு இருந்தாலும் இந்திய காட்சி அமைப்பு என்பதால் படத்தின் முடிவில் இந்திய சினிமாவின் கலாச்சாரத்தை பின்பற்றும் வகையில் பாடலுக்கும் ஓரிடம் கொடுத்திருப்பார். இதை விட ஒரு அவல நிலை சினிமாவிற்கு வேறு என்ன இருக்க முடியும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் இந்த படத்தை முழுமையாக பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும் இறுதியில் இடம் பெற்ற Jai Ho பாடல் படத்தின் realistic பிம்பத்தையே உடைத்திருக்கும். இவ்வளவுக்கும் இறுதியில் வரக்கூடிய Name credit sectionனில் Jai Ho பாடல் இடம்பெற்று இருந்தாலும் இது அவசியமற்றது என்ற எண்ணத்தை என்னுடைய மனதில் விதைத்தது.
இப்படிப்பட்ட விஷயங்களால்தான் இன்றும் இந்தியாவில் பாடல்களுக்கென ஓர் தனி மேடை கிடையாது, சினிமாவின் வெள்ளி மேடையை தான் பகிர்ந்து கொள்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், இசைக்கருவி வாசிப்பாளர்கள், இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதில்லை ஏனென்றால் சினிமாவில் அவ்வளவு பேருக்கும் இடமே இல்லை. இதை புரிந்து கொள்ளாமல் பெரும்பாலான கலைஞர்கள் சினிமாவின் பின்னாடியே ஓடி தன் வாழ்க்கையே இழந்திருக்கிறார்கள். மொத்தத்தில் இந்திய சினிமா பல இசை ஞானிகளின் வாழ்க்கையை புதைத்த கல்லறை என்பதில் எந்த ஒரு சந்தேகம் வேண்டாம்.
2 பிரச்சனை:
இந்தியாவை தவிர வேறு எந்த நாடாயினும், கலைஞர்கள் உருவாக்கும் பாடலுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் சொந்தம் கொண்டாடிக் கொள்ள உரிமை இருக்கிறது. அதாவது ஒரு பாடலின் முதலீடு முதல் வெளியிடு வரை ஒரு கலைஞரால் தன்னிச்சையாக செயல்பட்டு தயாரிக்கப்பட்டால் அந்தப் பாடலின் ராயல்டீஸ் என அழைக்கப்படும் publishing rights and master rights அந்தக் கலைஞருக்கே சொந்தமானது. ஒருவேளை முதலீடு ஒரு லேபிளால் செய்யப்பட்டிருந்தால் சில வருடங்களுக்கு மட்டும் அந்த லேபிள் master right-ஐ பயன்படுத்தி சம்பாதிக்கும் பின்னர் மீண்டும் Master Right அந்த கலைஞர்களுக்கு கொடுப்பது அவர்கள் இடையேயான ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் முதலீடு லேபிளே செய்து இருந்தாலும் publishing rights வாங்கிக் கொள்ள அனுமதி கிடையாது. அது எப்போதுமே அந்த பாடலை உருவாக்கிய கலைஞர்களுக்கு சொந்தமானது. இந்த செயல்பாடானது இந்தியாவிற்கும் பொருந்தும். ஏனென்றால் publishing rights & master rights சட்ட ரீதியான கட்டுப்பாடாகும். இருப்பினும் ஆரம்ப கட்டத்தில் இந்தியாவில் இதைப்பற்றி எந்த ஒரு கவலை சட்டமும் காட்டிக்கொள்ளவில்லை, கலைஞர்களுக்கும் விழிப்புணர்வு இல்லை என்பதால் இதை பயன்படுத்திக் கொண்டு நிறைய மியூசிக் லேபிள் நிறுவனங்கள் அல்லது திரைப்பட தயாரிப்பாளர்கள் பெரிய பெரிய இசையமைப்பாளர்களுக்கு அந்தப் பாடலில் வேலை செய்வதற்கான பணத்தை மட்டும் கொடுத்து பாடலை உருவாக்கிய பின் வாழ்நாள் முழுவதும் publishing rights & master rights பறித்து சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள்.
இதை எதிர்த்து Javed Akhtar என்னும் வட இந்திய பாடல் ஆசிரியர் சட்டமன்றத்தில் போராடி 1969-ஆம் ஆண்டு Indian Performing Right Society சுருக்கமாக IPRS என்ற ஒரு சிஸ்டமேட்டிக் ராயல்டி ரைட்ஸ் வழங்கும் சொசைட்டியை உருவாக்கினார். ஆனால் இதைத் தொடர்ந்தும் பெரும்பாலான மியூசிக் லேபிள் நிறுவனங்கள் ரவுடிகளை போன்று கலைஞர்களை மிரட்டி அவர்கள் கைப்படவே எழுதி அவர்களால் உருவாக்கப்படும் பாடல்கள் அனைத்திற்கான publishing rights and master rights பறிக்க ஆரம்பித்தார்கள். இதை எதிர்த்தும் பாலிவுட்டில் மிகப்பெரிய புரட்சியை வெடித்தது. உதாரணத்திற்கு 2014 ஆம் ஆண்டு abhay deol என்னும் பாலிவுட் நடிகர் T-Series-ன் இத்தகைய கலைஞர்களின் உரிமம் திருட்டை எதிர்த்து கேள்வி கேட்டதால் abhay deol தாக்கப்பட்டு. இதன் அடுத்த கட்டமாக abhay deol தனது career-யே இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு டி சீரீஸ் பாலிவுட்டை தன் கைக்குள் வைத்திருந்திருக்கிறது. இதைப் பார்த்து பெரும்பாலான கலைஞர்களும் நடிகர்களும் T-Series ஐ கேள்வி கேட்பதற்கு பயந்தனர். நாள் போக்கில் வெளிநாட்டு மியூசிக் லேபிள் நிறுவனங்களும் இந்தியாவிற்குள் வந்ததால் T-Series மாதிரியான கலைஞர்களின் உரிமை திருட்டுகளை செய்து கொண்டிருந்த பெரும்பாலான மியூசிக் லேபிள் நிறுவனங்கள் தங்களது வாலை சுருட்டி கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஏனென்றால் வெளிநாட்டு மியூசிக் லேபிள் நிறுவனங்களுக்கு இப்படிப்பட்ட திருட்டு வேளையில் உடன்பாடு இல்லை. அவர்களின் நியாயமான போக்கினால் பெரும்பாலான கலைஞர்களை தங்களது நிறுவனத்தின் வாயிலாக ஈர்த்தார்கள். கலைஞர்களும் இத்தகைய நியாயமான மியூசிக் லேபிள் நிறுவனத்தை நாட ஆரம்பித்தார்கள். ஆகையால் இந்தியாவை சேர்ந்த மியூசிக் லேபில் நிறுவனங்களும் வேறு வழி இன்றி மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளவும் கலைஞர்களை வரவழைக்கவும் தாங்களும் முறையான ராயல்டி உரிமை கட்டுப்பாட்டிற்கு உட்பட்டார்கள். இருப்பினும் இன்றும் ஒரு சில நிறுவனங்கள் புதிய கலைஞர்களிடம் இப்படிப்பட்ட சட்டவிரோத உரிமை திருட்டுகளை செய்து கொண்டு தான் இருக்கிறது.
3 பிரச்சனை:
பெரும்பாலான கலைஞர்களுக்கு தங்களது பாடலை எப்படி தன்னிச்சையாக வெளியிடுவது, விளம்பரப்படுத்துவது, அதன் வாயிலாக எப்படி சம்பாதிப்பது, இதை காட்டிலும் தங்களுடைய படைப்பின் உரிமமான publishing rights & master rights எப்படி கிளைம் செய்வது என்பதே தெரியாது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெரும்பாலும் இதைப் பற்றி அவர்கள் தேடுவதில்லை. ஏனென்றால் அவர்களை பொறுத்தவரை சினிமாவில் பாடல்கள் வந்தால் தான் இதர ஸ்விம்மிங் பிளாட்பார்மில் பாடல்கள் இடம் பெறும் என்ற நம்புகிறார்கள்.
கேள்வியே தெரியவில்லை என்றால் பதில் எப்படி தெரியப் போகிறது. அதிலும் தனிப்பட்ட முறையில் நான் சந்தித்த சில நபர்கள் குறிப்பாக 90களில் பிறந்த நபர்கள் இன்றைய சோசியல் மீடியாவை எப்படி பயன்படுத்துவது என்று அவர்களுக்கு தெரியவில்லை. அப்படியே தெரிந்து இருந்தாலும் தெளிவுபட அவர்கள் இன்னும் அறியவில்லை. இதில் குறிப்பாக தன்னை இணையதளத்தில் அறிமுகப்படுத்துவதற்கு google knowledge panel என்று ஒன்று உள்ளது என்பது கூட அவர்களுக்கு தெரியாது.
நான் பார்த்தவரை இவர்களும் தினமும் ஸ்விம்மிங் பிளாட்பார்மில் ஒரு தன்னிச்சையை இசைக்கலைஞர் பாடல்களை கேட்கிறார்கள், google knowledge panel ப்ரோபைல் உருவாக்கிய பலரது விபரங்களை கூகுளில் பார்க்கிறார்கள், ஆனால் இதே விஷயத்தை தனக்கு எப்படி செய்து கொள்வது என்று அவர்கள் தேடுவதில்லை. இதுதான் நம் நாட்டின் Independent கலைஞர்கள் முன்னேறாமல் இருக்க வழி வகுக்கும் அறியாமை என்று நான் நம்புகிறேன்.
4 பிரச்சனை:
தற்போது இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பெரும்பாலான Independent இசை கலைஞர்கள் லேபிள்களை முழுமையாக வெறுக்கிறார்கள். மற்ற, புதிய, வருங்கால Independent இசைக்கலைஞர்களிடமும் லேபிளையும் நாடி போகாதீர்கள் என்று வலியுறுத்துகிறார்கள்.
இதற்கு முக்கியமான காரணம் ஒரு சில indie artist தங்களது பயணத்தை லேபில்கள் மூலம் தொடர்வதற்கு விண்ணப்பித்து. lableலும் ஒரு குறிப்பிட்ட தொகையை கலைஞனுக்கு கொடுத்து உருவாக்குகிறார்கள். இதில் அந்த கலைஞருக்கும், லேபிளுக்கும் இருக்கக்கூடிய ஒப்பந்தம் என்னவென்றால், இந்த தொகையை பயன்படுத்தி உருவாக்கப்படும் அந்தப் பாடல் ஆனது தங்களது லேபிளில் வெளியிடப்படும். இப்படி வெளியிடப்படும் அந்தப் பாடல் முதலில் லேபிளால் இந்த பாடலை உருவாக்க ஒதுக்கப்பட்ட தொகையை மீட்க வேண்டும். இதன் பிறகு ஐந்து முதல் 8 வருடம் அல்லது 10 வருடம் ஒப்பந்த காலம் முடியும் வரை இந்தப் பாடலின் master rights லேபிள் வைத்துக் கொண்டு சம்பாதிக்கும். அப்படி சம்பாதிக்கப்படும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அந்த கலைஞருக்கும் மீதமுள்ள சதவீதம் அந்த டேபிளும் என பிரித்துக் கொள்வார்கள். ஒப்பந்தத்தின்படி எத்தனை வருடத்திற்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டதோ அது முடிந்தவுடன் லேபிள் master rights-ஐ அந்தக் கலைஞருக்கே திருப்பித் தந்துவிடும். இப்படிப்பட்ட லேபிள்கள் தான் தன்னை indie artist காண லேபல் என வாதாடுகிறது.
தூரத்தில் இருந்து பார்க்கும்போது இது ஒரு சரியான ஒப்பந்த பரிவர்த்தனை போல் தெரியும். ஆனால் அருகில் இருந்த அந்த கலைஞருக்கு போகப்போக தான் புரியும் தான் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டோம் என்று. அது என்னவென்றால் ஒவ்வொரு தன்னிச்சை கலைஞர்களும் புதிதாக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அந்த கலைஞன் யார் என்று மக்களுக்கு தெரியாது. அதனால் அவர்களது படைப்பை பற்றி பெரும்பாலான மக்கள் கவலைப்பட போவதில்லை. இருப்பினும் உருவாக்கப்பட்ட பாடலின் செலவு செலவழித்த டேபிள் பணத்தை திருப்பி எடுக்கவே வெகு நாட்களாகிவிடும். இதன் பின்தான் அவர்களது ஒப்பந்த வருடாந்திர கணக்கே தொடங்கும். அதுவரை அந்த கலைஞரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.
இப்படிப்பட்ட கேள்விக்குறியை முதுகில் சுமக்கும் அந்த கலைஞர்களிடம் லேபிள் நீ பேசாம இன்னொரு பாட்டு பண்ணு அதுக்கும் பணம் கொடுக்கிறேன் ஒரு வேளை அந்தப் பாட்டோட சம்பாத்தியம் பழைய பாட்டோட செலவையும் சேர்த்து சம்பாதித்த பிறகு ரெண்டு பாட்டோட வருடாந்திர ஒப்பந்தத்தை தொடங்கலாம் அப்படின்னு சொல்லுவாங்க. அந்தக் கலைஞனும் முன்னேறுவதற்கு இது சரியான வாய்ப்பு என நம்பி மீண்டும் ஒரு பாடலை உருவாக்குவான். அதுவும் வெளியிடப்படும், ஆனால் இதுவும் கிடப்பிலேயே கிடக்கும் எந்த ஒரு சம்பாத்தியமும் streaming பிளாட்பார்மிலிருந்து இந்தப் பாடல்கள் சம்பாதிக்காது. இப்போது இரண்டு பாடல்களுக்கும் லேபிள் செலவு செய்த பணத்தை திருப்பி தர வேண்டிய கட்டாயத்திற்கு அந்த கலைஞன் ஆளாகி விடுவான். ஆனால் ஒப்பந்தத்தின்படி வெளியிடப்படும் பாடலின் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து தான் முதலீட்டு பணத்தை லேபிள் எடுத்துக் கொள்ள வேண்டும். இருப்பினும் அந்த கலைஞன் வேறொரு லேபிலிடம் சென்று தொடர முடியாது ஏனெனில் வேறு ஒரு லேபிளிடம் சென்றால் முந்தைய லேபிளில் அவரது பாடல் ஓடவில்லை என்று அவர்கள் தெரிந்து கொண்டு மறுத்துவிடுவார்கள். விளைவு ஒரு கடனாளியை போன்று பாடலை வெளியிட்ட அந்த லேபில் நிறுவனத்திடமே வருடக் கணக்காக பாடலுடன் சேர்ந்து கலைஞனும் கிடப்பில் கிடப்பான். கிட்டத்தட்ட இது ஒரு கடன் வாங்கிய நிலைமைக்கு அவனைக் கொண்டு சென்று விடும். அவனது தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்படும். சம்பாத்தியம் என்பது ஒன்றுமே இல்லாமல் ஏதாவது மாயாஜாலம் நடந்து விடுமா என்ற எண்ணத்திலேயே வருடங்களை கடப்பான். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த லேபில் சரி இந்த பாடலை நாங்களே வைத்துக் கொள்கிறோம் என் கடனை திருப்பித் தர வேண்டிய அவசியம் இல்லை அதற்கு பதிலாக publishing rightsயும் சேர்த்து கொடுத்து விட்டு இங்கிருந்து நீ செல்லலாம் என்று விண்ணப்பிப்பார்கள். விளைவு அவனது உழைப்பும் நேரமும் லேபரிடமிருந்து வாங்கிய தொகையை திருப்பித் தர முடியவில்லை என்பதால், அனைத்தையும் லேபிளுக்கே கொடுத்து விட்டு சென்று விடுவான். இதில் நஷ்டம் யாருக்கு என்று நீங்கள் நினைக்கிறீர்கள். என்னைப் பொருத்தவரை இரண்டு தரப்பிலும் நஷ்டம் தான் ஆனால் அந்தக் கலைஞன் முழுமையாக நாசமாகி விடுவான்.
இப்படிப்பட்ட செயல்பாட்டிற்கு லேபிளை குறை சொல்வதை விட அறியாமையிலேயே அந்தக் கலைஞனின் அறியாமையே குறை குறை சொல்ல உகுந்தது. அதுமட்டுமின்றி ஆரம்பத்திலேயே லேபுளுக்கு நன்றாக தெரியும் இவன் ஒரு அறிமுகம் இல்லாத கலைஞன் இவனுடைய பாடல் பெரிதாக வெற்றி பெறப் போவதில்லை. இருப்பினும் ஏதாவது ஒரு மாற்றங்கள், மாயாஜாலங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது ஒருவேளை பாடல் மக்களுக்கு பிடித்திருந்தால் லேபிள் சம்பாதித்து விடும். இல்லை என்றாலும் லேபிளுக்கு பெரிய ஒரு நஷ்டம் ஒன்றுமில்லை. மற்றும் தங்களது லேபிள் Indie கலைஞர்களை ஆதரிக்கும் லேபிள் என்று மாறு தட்டிக் கொள்வதால் அவ்வப்போது indie கலைஞர்களை லேபிளின் portfolio-வில் காண்பிக்க வேண்டும் என்பதும் கட்டாயம். ஆகையால் இப்படிப்பட்ட லேபில் நிறுவனங்கள் அறியாமையில் இருக்கும் கலைஞர்களே அவர்களது முதல் டார்கெட்.
அதனால் தான் இந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொண்ட பல Indie கலைஞர்கள் லேபிளின் நாடாதீர்கள் என்று அறிவுறுத்துகிறார்கள்.
5 பிரச்சனை:
கலைஞர்களை முன்னேறவிடாமல் தடுப்பதற்கு சினிமா மட்டுமே காரணம் கிடையாது, சினிமாவின் மற்றொரு கண்ணான Tv Shows-ம் தான். எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது நான் சிறுவயதில் இருக்கும் போது பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவர் அவரது டிவி பழுது அடைந்து விட்டதால் எங்களது வீட்டில் வந்து விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் என்ற Reality Shows பார்ப்பார். அது வெறும் ஆடலுக்கான நிகழ்ச்சி தான் ஆனால் அப்போதைய இளைஞர்களை ஈர்த்த ஒரு நிகழ்ச்சி என்று கூட கூறலாம். இதைத் தொடர்ந்து எனது நண்பர்களின் வீட்டில் அவர்களின் பெற்றோர்கள் குழந்தைகள் பாடும் நிகழ்ச்சிக்கு பரம ரசிகர்களாகி இருப்பதை அவர்களின் வீட்டிற்கு செல்லும்போது நான் கவனித்து இருக்கிறேன். இப்படி ஒவ்வொரு வயது வரம்புக்கு உட்பட்ட நபர்களும் ஒரு ஒரு வகையான Reality Showsக்கு நேயர்களாக இருக்கிறார்கள். இது அன்றும் சரி, என்றும் சரி, இனியும் தொடரக்கூடிய விஷயம்தான். அதை நான் தவறு என்று கூறவில்லை ஆனால் உண்மையில் இந்த நிகழ்ச்சி எவருக்குமே பிரயோஜனம் இல்லாத விஷயம்தான். நீங்கள் கவனித்து பார்த்தீர்கள் என்றால் ஒரு சில பாடல் நிகழ்ச்சி அல்லது ஆடல் நிகழ்ச்சிகளில் புகழ்பெற்று இருக்கும் contestant அந்த நிகழ்ச்சியின் இறுதி முடிவின் பிறகு எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்ற எந்த ஒரு விவரமும் மக்களுக்கு தெரியாது. இதிலும் கொடுமை என்னவென்றால் ஒரு சில நிகழ்ச்சியில் புகழ்பெற்ற contestant அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் மீண்டும் வேறொரு நிகழ்ச்சிக்காக auditionக்கு வரிசையில் நிற்பார். அவருக்கு திறமை இருக்கிறது அந்த ஆடிஷன் வெறும் மேலோட்ட பார்வை தான் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அப்படி வரிசையில் நின்று தான் அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் இதற்கு முன்னதாக அவர் வென்ற பட்டத்திற்கு என்ன சிறப்பு இருக்கிறது.
இதனாலையோ என்னமோ தெரியவில்லை நூற்றில் 99 சதவீதமான Reality Shows contestant நாள் போக்கில் ஓரிரு நிகழ்ச்சியில் மட்டுமே அறிமுகமாகி விட்டு காணாமல் போய்விடுகிறார்கள்.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால் இங்கு ஒரிஜினலுக்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது ஏற்கனவே பாடிய ஒரு பாடலை மீண்டும் பாடுவதாலையோ அல்லது ஏற்கனவே அந்த பாடலுக்கு திரையில் கலைஞர்கள் ஆடிய பிறகும் அதைவிட சிறப்பாக ஆடுவதைப் போன்று ஒரு மேடையில் குதிப்பதாலும் வளர்ச்சி பாதையை நோக்கி அந்த contestant உயர மாட்டான். அப்ப முன்னேற்றம் எப்படி கிடைக்கும் என்றால் இந்த Reality Shows ஒரிஜினல் கன்டன்ட்டை வரவேற்க வேண்டும். உதாரணத்திற்கு சினிமா பாடலை நன்றாக பாடும் நபர்களை தேர்வு செய்வதை விட. music bandடை தேர்வு செய்து ஒவ்வொரு வாரமும் அவர்களது ஒரிஜினல் பாடல்களை Reality Shows ஆக மக்களுக்கு விருந்தளித்தால் அந்தக் கலைஞனுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அவனை தேடி மற்ற சில வாய்ப்புகளும், விளம்பரங்களும் கூடி வரும். உண்மையான ரசிகர்கள் அவனை சூழும். இந்த முயற்சியை Moj யூடியூபை தளமாக பயன்படுத்தி வெற்றி அடைந்திருக்கிறது. பின்னர் ஏன் பெரிய பெரிய டிவி சேனல்கள் இந்த முயற்சியை செய்ய மறுக்கிறார்கள் என்றால் பழைய முயற்சியிலேயே நல்ல ஒரு TRP கிடைக்கும் போது எதற்காக புதிய முயற்சியில் சோதனை ஓட்டம் செய்ய வேண்டும் என்று கூட யோசிக்கலாம்.
என்னைப் பொருத்தவரை நம் நாட்டின் கலைஞர்களுக்கான முன்னேற்றத்திற்கு சரியான Orginal கிரியேஷனை ஆதரிக்கும் Reality Shows இருந்தால் போதும். அயல் நாட்டு கலைஞர்கள் கட்டிய கொடிக்கு இணையான வெற்றி கொடியை நம் நாட்டு கலைஞர்களும் ஏற்றுவார்கள்.
6 பிரச்சனை:
2025 ஆம் ஆண்டு நான் Tech Boss நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கு நான் பீனிக்ஸ் என்ற பெயரில் ஒரு நபரை சந்தித்தேன். இவர் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு NRI. இவருடைய தொழில் புகழ்பெற்ற இசை கலைஞர்களை ஒன்று சேர்த்து music concert செய்வதுதான். இவர் என்னிடம் கூறிய ஒரு உண்மை என்னவென்றால் Music துறையிலேயே music concert மட்டும்தான் மிகுந்த பொருள் செலவில் நடத்தப்படும் நஷ்டத்திற்கான மேடை ஆகும். தமிழ்நாட்டில் அனிருத்தை தவிர வேறு யாருக்கும் தற்போதைய சூழ்நிலையில் டிக்கெட் விற்று போவதில்லை. இதனாலையே பெரும்பாலான இசை கலைஞர்கள் music concert செய்வதையே நிறுத்திவிட்டார்கள். அதையும் மீறி music concert நிகழ்ச்சிக்கு ஒரு இசைக் கலைஞர் ஒத்துக் கொள்கிறார்கள் என்றால் அந்த நிகழ்ச்சியானது உலகம் முழுவதும் நடத்தப்படும் World Tour Concert-ஆக தான் இருக்கும். இதற்கு மட்டும் எதற்காக கலைஞர்கள் ஒத்துக் கொள்கிறார்கள் என்றால் நமது நாட்டு மக்கள் Concert-டின் 2000 முதல் 15,000 வரை இருக்கக்கூடிய டிக்கெட்டை யாரும் வாங்கப் போவதில்லை. பெரும்பாலும் இந்தியா முழுக்க இருக்கக்கூடிய மக்கள் அவர்களது குறைந்தபட்ச மாத வருமானமே பத்தாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் தான். அவர்கள் எப்படி டிக்கெட் வாங்குவார்கள். இருப்பினும் இரண்டாயிரத்திற்கும் குறைவாக டிக்கெட் விற்க முடியாது அது வெளிப்படையான நஷ்டத்திற்கு கொண்டு போய் சேர்த்து விடும்.
அது மட்டும் இன்றி இந்தியாவில் concert-காகக்கூடும் மக்களில் 40 சதவீதத்திற்கும் குறைவான நபர்கள் தான் டிக்கெட்டை வாங்கி அவர்களாக இருப்பார்கள். மீது உள்ள அனைவரும் இலவசமாக டிக்கெட்டை பெற்றவர்களாக தான் இருக்கும். ஏனெனில் நிகழ்ச்சிக்கு ஓரிரு நாட்களுக்கு முன் டிக்கெட் எவ்வளவு வெற்றி இருக்கிறது என்று நாங்கள் தெரிந்து கொண்டு மீதி உள்ள டிக்கெட்டை ஏஜென்சி மூலம் இதர நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இலவசமாக கொடுக்க சொல்லிவிடுவோம். அப்படியாவது கூட்டம் நிறையட்டும் கலைஞர்கள் சொப்பு கூட்டத்தைப் பார்த்து பாட முடியாது என்ற நிபந்தனையினால் மட்டும்தான்.
இவர் சொல்லும் போது தான் எனக்கு ஒரு விஷயம் தெரியவந்தது நானும் முதல் முதலில் 2025 ஆம் ஆண்டு தான் music concert-க்கு சென்றேன் அது "return of the dragon" hip hop tamizha adhi-யின் music concert ஆகும். உண்மையில் நானும் என்னுடைய நண்பர்களும் வைத்திருந்த டிக்கெட் கிட்டத்தட்ட 15,000 ரூபாய்க்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்த டிக்கெட். அது எங்களுக்கு இலவசமாக கிடைத்தது. எப்படி என்றால் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த Tech Boss நிரூபணம் ஒரு மசாலா கம்பெனி ஆரம்பிக்க யோசித்துக் கொண்டிருந்தார்கள், அதற்காக ஏதோ ஒரு நபரை சந்திக்கப் போயிருந்த போது அவர் மூலமாக எட்டு டிக்கெட் வழங்கப்பட்டதாக சொன்னார்கள். இதை வைத்து தான் எனக்குப் புரிந்தது உண்மையில் Concert நிகழ்ச்சியில் கூடும் பெரும்பாலான மக்கள் டிக்கெட் வாங்கி வந்தவர்கள் அல்ல நிறுவனங்களால் இலவசமாக கொடுத்து அனுப்பி வைக்கப்பட்ட நபர்கள் என்று. இதற்கு நான் அந்த கலைஞர்களை குறை சொல்லவில்லை அவர்கள் தங்களுடைய கரியர் பீக்கில் தான் Concert செய்கிறார்கள் இருப்பினும் டிக்கெட்டின் விலை காரணமாக பெரும்பாலான அந்தக் கலைஞனின் ரசிகர்கள் வாங்க மறுக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நஷ்டகரமான தொழிலை பீனிக்ஸ் செய்வதால் அதை விட்டுவிட்டு தற்போது பாடல்களை தயாரிக்கும் தொழிலில் இறங்கப் போவதாகவும் அந்தப் பாடலின் ராயல்டி மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது எனவும் என்னிடம் கூறினார்.
கலைஞர்களின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு:
Tune Glitz இது வெறும் மியூசிக் லேபிள் கம்பெனி கிடையாது. கலைஞர்களுக்கான இசை புரட்சியை வழிநடத்த போகும் நிறுவனம். மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வுகளை Tune Glitz-ன் சிறப்பம்சமாக முன்வைத்து இயங்கப் போகிறது. அது எப்படி?
நிறுவனத்தின் செயல்பாடு:
Tune Glitz நிறுவனம் மூன்று விதமான கட்டமைப்பில் கலைஞர்களுடன் இணைந்து செயல்பட போகிறது.
Type A: முதலாவது சமூக வலைத்தளங்களில் முறையாக இசை கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் நல்ல குரல் வளமுள்ள பலரும் சினிமா பாடல்களை பாடி அதை வீடியோவாக வலைத்தளத்தில் பதிவிடுவதை நான் கவனித்திருக்கிறேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இப்படிப்பட்ட பாடகர்களின் சமூக வலைத்தள பதிவுகளுக்கு பெருமளவில் ரசிகர் பட்டாலும் இருக்கிறார்கள். ஒரு நிறுவனத்தின் லாபத்தை குறி வைத்து இவர்களை பார்க்கும்போது இந்த கலைஞனுக்கு நிறுவனத்தின் சார்பாக ஒரு இசை அமைப்பாளர் உடன் அறிமுகப்படுத்தி இருவரும் இணைந்து பாடலை உருவாக்கி அதை வீடியோவாகவும் (Video Song) ஆடியோவாகவும் வெளியிட்டால் கண்டிப்பாக அந்தப் பாடகனின் சமூக வலைத்தள ரசிகர்களே ஆதரிக்க தொடங்குவார்கள். ஒரு வேலை அந்தப் பாடல் மிகப் பிரமாதமாக வந்திருந்தால் இன்சியல் பூஸ்ட் ஆக அந்தப் பாடகனின் ரசிகர்கள் ஊக்குவித்து பெரிய ஒரு வெற்றி மேடையை நோக்கி இந்தப் பாடலைக் கொண்டு செல்வார்கள். இதில் பாடலை உருவாக்குவதற்கும் அதை வீடியோவாக மாற்றுவதற்கும், வெளியிடுவதற்கும் இன்னும் என்னென்ன தேவைகள் எல்லாம் இருக்கிறதோ அனைத்திற்கான செலவையும் Tune Glitz ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் இந்தப் பாடலின் Master Rights நிறுவனத்திற்கு சொந்தமாகும், publishing rights இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியருக்கு நிரந்தரமாக எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் வழங்கப்படும். பாடலின் மூலம் எந்த ஒரு நஷ்டங்கள் ஏற்பட்டாலும் அதற்கு நிறுவனமே பொறுப்பேற்றுக் கொள்ளும் அந்தப் பாடலில் வேலை செய்த கலைஞர்கள் அல்ல.
- நல்ல குரல் வளமுள்ள பாடகர்கள் அறிமுகப்படுத்தப்படுவர்.
- புதிய இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் அறிமுகப்படுத்தப்படுவர்.
- நிறுவனத்திற்கும், கலைஞர்களுக்கும் சேர வேண்டிய ராயல்டி வெளிப்படையாக வழங்கப்படும்.
- கலைஞர்களுக்கு எந்த ஒரு நிபந்தனை ஒப்பந்தமும் கிடையாது.
Type B: இரண்டாவதாக ஒருவேளை நாங்கள் தேர்வு செய்யும் பாடகர்கள் ஏற்கனவே இசை துறையில் பிரபலமானவர்களாக இருந்தாலோ அல்லது தேர்வு செய்யப்பட்ட அந்த பாடகனுக்கான இசையமைப்பாளர் பிரபலமானவர்களாக இருந்தால். Type A-யில் சொன்ன விஷயங்கள் அனைத்தும் பொருந்தும் + இது போக தேர்வு செய்யப்படும் இந்த கலைஞர்களின் பிரபலமானவர்கள் என்பதால் Master Right-லும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ராயல்டி நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ வழங்கப்படும். ஆனால் Master Right மூலமாக சம்பாதிக்கும் பணத்தில் முதலில் நிறுவனம் முதலீடு செய்த அந்தப் பணத்தை பெற்ற பிறகு தான் கலைஞர்களுக்கு Master Right பங்கிடானது வழங்கப்படும். இப்படி வழங்கப்படும் ராயல்டி அளவானது அந்த கலைஞனின் பிரபலத்தை பொறுத்து அந்த பிரபலம் எந்த வகையில் உருவாக்கப் போகும் பாடலுக்கு மெழுகூட்டும் என்பதை கவனத்தில் வைத்து நிறுவனமும் அந்த கலைஞனும் ஒன்றாக பேசி ஒப்பந்த போடப்படும்.
- தேர்வு செய்யப்பட்ட இந்த பிரபலமான கலைஞர்களுடன் புதிய கலைஞர்களையும் ஒன்றாக இணைந்து வேலை செய்ய வைக்க முடியும் இதனால் அந்த புதிய கலைஞனுக்கும் மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைக்கலாம்.
- இப்படி பிரபலமான கலைஞர்களை நிறுவனம் பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் நிறுவனமும் பிரபலமாகும், நிறுவனத்தால் இனி அறிமுகப்படுத்தப் போகும் புதிய கலைஞர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கலாம்.
Type C: ஒரு சில பாடகர்கள், இசையமைப்பாளர்கள் அல்லது Music Band அவர்களால் தன்னிச்சையாகவே சிறந்த பாடல்களை உருவாக்கி இருப்பார்கள் அல்லது உருவாக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கலாம். ஓரளவிற்கு கலைஞர்கள் தங்களது பாடலுக்கு முதலீடு செய்தாலும் வர்த்தக முறையில் Recoding, Video production, Marketing, என இதர வேலைகளுக்கு பண செலவு அதிகம். ஆகையால் இப்படிப்பட்ட கலைஞர்கள் Tune Glitz உடன் இணைந்து சரி பாதியாக 50% நிறுவனத்தின் சார்பாகவும், 50% அந்த கலைஞர்களின் சார்பாகவும் முதலீடு செய்து பாடலை உருவாக்குவோம். அப்படி உருவாக்கப்படும் பாடலின் Master Right 50/50 என நிறுவனமும் அந்தக் கலைஞனும் நிரந்தரமாக பங்கிட்டு கொள்வார்கள். மற்றும் முதலீட்டில் மட்டுமே நிறுவனத்தின் பங்கு இருப்பதால் publishing rights அந்தக் கலைஞனுக்கு சொந்தமாகும். ஒருவேளை அந்தக் கலைஞனால் 50% முதலீடு செய்ய முடியவில்லை ஆனால் 20%, 30%... முதலீடு செய்ய முடியும் என்ற பட்சத்தில் அதற்கேற்றவாறு Master Right ராயல்டி பங்கிடப்படும்.
- இந்த முறையால் ஒரு பிரபலம் இல்லா கலைஞனும் Master Right ராயல்டீயை நிரந்தரமாக பெற்றுக் கொள்ள முடியும்.
- கலைஞர்களின் Co-Producer ஆக நிறுவனமே பொறுப்பேற்றுக் கொள்ளும்.
Type D: கலைஞர்கள் அவர்களின் படைப்புகளை வெளியிடுவதற்கு விதவிதமான வாய்ப்புகள் Tune Glitz வழங்குகிறது.
- ஒரு சில கலைஞர்கள் அவர்களின் வீட்டிலேயே பாடலை உருவாக்கி இருப்பார்கள். அதனால் பாடலானது குவாலிட்டி இல்லாமல் இருக்கும். அதையும் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். இந்தப் பாடல்களில் முழு instrumental செய்திருக்க வேண்டிய அவசியம் கூட கிடையாது. நல்ல மெட்டு போட்டு பியானோவில் Chord பிடித்து சிறப்பான வரிகளால் பாடி அனுப்பினால் கூட Tune Glitz-இன் தேர்வு விண்ணப்ப பட்டியலில் வைத்துக் கொள்ளும். ஒருவேளை அந்த பாடல் தேர்வு செய்யப்பட்டால், அந்தக் கலைஞரை வரவழைத்து அவரது பாடலுக்கு முதலீடு செய்து குவாலிட்டியாக உருவாக்கி பாடலை உருவாக்கிய அந்தக் கலைஞனையோ அல்லது வேறு ஒரு கலைஞரை பாடவைத்து இந்தப் பாடலை Tune Glitz future செய்யும். மற்றும் முறைப்படி அந்தப் பாடலுக்கான கலைஞர்களுக்கு ராயல்டி மற்றும் pay வழங்கப்படும்.
- இன்னும் ஒரு சில கலைஞர்கள் அவர்கள் சிறப்பாக குவாலிட்டி சாங்கை உருவாக்கி அதை ஆடியோவாகவோ அல்லது ஒரு முழு வர்த்தக வீடியோ சாங் ஆகவோ உருவாக்கி அந்தப் பாடலை ஏதாவது லேபிளுக்கு முழுமையாக விற்பதற்கு நினைத்தால் கூட Tune Glitz தேர்வு விண்ணப்ப பட்டியலில் வைத்துக் கொள்ளும். இப்படி தேர்வு செய்யப்படும் பாடல்களை நிறுவனம் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளும்.
- இதனால் கலைஞர்களின் இயலாமையால் நல்ல பாடல்கள் வெளிவராமல் போகாது
- சிறப்பான பாடலுக்கு சிறந்த விலை Tune Glitz கொடுக்கும்
தற்போது நிலைமையில் இந்த நான்கு முறைகளின் அடிப்படையில் கலைஞர்களின் கலை படைப்பான பாடல்களை Tune Glitz அணுக முடிவு செய்து இருக்கிறது. இதில் மாற்றங்கள் ஆயினும் அல்லது இன்னும் ஒரு சில புதிய முறையில் காலத்திற்கு ஏற்றவாறு அல்லது நாங்கள் எதிர்கொள்ள போகும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு வரலாம்.
மொத்தத்தில் independent music artists அவர்களின் பாடலை லேபிள் மூலமாக வெளியிட நினைத்தால் Tune Glitz-தான் முதலில் ஞாபகம் வர வேண்டும். எங்கள் நிறுவனத்தை தழுவியே அவர்களின் படைப்பானது வெளியேற வேண்டும் என விரும்புகிறோம்.
Tune Glitz அடுத்த கட்ட நடவடிக்கைகள்:
நான் மேல்கண்ட நிறுவனத்தின் மேம்பாட்டு நடவடிக்கை அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டால் சமூக வலைத்தளத்திலும் இதர ஸ்ட்ரீமிங் பிளாட்பார்மிலும் independent music artist-க்கு Tune Glitz சிறந்த லேபிள் என்ற பெயரை பெற்றுவிடும் அதே சமயம் நிரூபணம் லாபகரமாக முன்னேறிக் கொண்டிருக்கும். நான் முதலிலேயே சொன்ன மாதிரி Tune Glitz independent music கலைஞர்களுக்கான புரட்சியை வழிநடத்த போகும் நிறுவனம். இந்த புரட்சியானது தொழிலில் மட்டுமல்ல மக்களின் மனதிலும் விதைக்க போகும் புரட்சி. அதற்கு மக்களின் இசை மற்றும் இசைக் கலைஞர்கள் மீதான கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும்.
மாற்றத்திற்கான மார்க்கெட்டிங்:
மக்கள் பொதுவாக பொழுதுபோக்கிற்கு எதையெல்லாம் நாடுகிறார்களோ அங்கெல்லாம் இருக்கக்கூடிய இசையில் புரட்சியை உருவாக்க வேண்டும்.
Tune Glitz-ன் Official Tv Channel: Independent கலைஞர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களின் பாடலை மட்டுமே ஒளிபரப்ப கூடிய ஒரு டிவி சேனல் இருக்க வேண்டும், எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது இன்டர்நெட் வளர்ச்சி அடைவதற்கு முன் தமிழ்நாட்டில் Sun Music சேனல் மிகவும் பிரபலமாக இருந்தது. நான் பார்த்த வரைக்கும் Sun Music புதிய படங்களின் பாடல்கள் ஒளிபரப்புவதில் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருந்தன, Live Show மூலமாக நேயர்கள் Vj-களை தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தன, சினிமா கலைஞர்களை பேட்டியோ அல்லது நேர்காணலில் நேயர்களுடன் பேசவும் வைத்துக் கொண்டிருந்தன. இப்படி பல வகையான விஷயங்கள் மக்களை ஈர்க்கும் வகையில் இந்த சேனல் செய்து கொண்டிருந்ததாலையோ என்னமோ இதற்கான வரவேற்பு பெருமளவில் இருந்ததை நான் கண்கூடாக பார்த்தேன். இதே மாதிரி தான் Independen Music Album, EP, Single பாடல்களுக்கான டிவி சேனலை Tune Glitz திறக்கும்.
Tune Glitz-ன் Official Radio Channel: இன்றைய காலகட்டத்தில் ரேடியோ யாராவது கேட்கிறார்களா என என்னிடம் கேட்டால் எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் அப்படி யாருமே கேட்கவில்லை என்றால் எதற்காக என்றும் ரேடியோ சேனல்கள் இருக்கிறன. அப்படி இருக்கிறதா என்றால் ஏதோ ஒரு வகையில் மக்கள் என்றும் ரேடியோக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் அந்த மக்களிடமும் Independent கலைஞர்களின் பாடல்களை கொண்டு சேர்க்க வேண்டும். அதனால் Radio ஊடகத்திலும் Tune Glitz ஸ்டேஷனை திறக்கும்.
Indie கலைஞர்களுக்கான Distributor: பொதுவாக ஒரு மியூசிக் லேபில் நிறுவனம் அவர்களுக்கென அவர்களுடைய பாடல்களை மட்டுமே வெளியிடக்கூடிய Distributor பிளாட்பார்ம் வைத்திருப்பார்கள். தற்போது சூழ்நிலையில் Tune Glitz, tune core டிஸ்ட்ரிபியூட்டர் மூலமாக பாடல்களை வெளியிட்டாலும் வளர்ச்சிப் பாதையை நோக்கி Tune Glitz நிறுவனம் செயல்படும்போது நிறுவனத்தின் சொந்தமான Distributor பிளாட்பார்ம் உருவாக்கப்படும். இது பொதுவாக அனைத்து மியூசிக் லேபில் நிறுவனங்களும் செய்யக்கூடியது தான், ஆனால் Tune Glitz மூலமாக உருவாக்கப் போகும் டிஸ்ட்ரிபியூட்டர் பிளாட்பார்ம் ஆனது நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் Indie கலைஞர்கள் Tune Glitz நிறுவனத்தில் இணையாமலே தன்னிச்சையாக பாடல்களை வெளியிட டிஸ்ட்ரிபியூட்டர் சர்வீஸ் சர்வீஸ்ஐ நாடினால் Indie கலைஞர்களுக்கு மட்டும் Tune Glitz டிஸ்ட்ரிபியூட்டர் பிளாட்பார்ம் மிகக் குறைந்த வருடாந்திர விலையில் அவர்களுக்கு என சர்வீஸ் வழங்கப்படும். அது மட்டுமில்லாமல் இலவசமாகவோ அல்லது தள்ளுபடி விலையில் அவர்களின் பாடலை Stremming பிளாட்பார்மில் டிஸ்ட்ரிபியூட்டர் சார்பாக ப்ரோமோட் செய்யப்படும். இதுபோக Indie கலைஞர்களை ஊக்கவிக்கும் பல புதிய Event & திட்டங்களையும் உருவாக்கப்படும். மொத்தத்தில் Tune Glitz Indie கலைஞர்களுக்கான சிறந்த டிஸ்ட்ரிபியூட்டர் பிளாட்பார்மை உருவாக்கப் போகிறது.
மீண்டும் மக்கள் மத்தியில் CD Culture: இந்த நவீன உலகத்தில் இன்றும் கூட அயல்நாடுகளில் CD வாங்கி பாடல்கள் கேட்கும் கலாச்சாரம் இருக்கிறது. இருப்பினும் மேலோட்ட பார்வையில் அனைவரிடமும் செல்போன் வந்துவிட்டது youtube அல்லது இதர சர்விஸ்கள் மூலமாக indie கலைஞர்களின் பாடல்களை கேட்க முடியுமே என்று யோசித்தாலும். அந்தக் கலைஞனுக்கு இப்படி வரக்கூடிய சம்பாத்தியத்தை விட CD விற்பனையில் தான் அந்த கலைஞனுக்கு அதிகமாக கிடைக்கும். அதனால் தான் CD மரபானது இன்றைய காலகட்டத்தில் இல்லையே என்று பல கலைஞர்கள் வருத்தப்படுகிறார்கள். ஆகையால் மீண்டும் CD வாங்கி பாடல்கள் கேட்கும் பழக்கத்திற்கு மக்களை மாற்றக்கூடிய மாற்றத்தை Tune Glitz கையில் எடுக்கப் போகிறது.
மக்கள் மத்தியில் Music Concert Culture: நான் முதல் முதலில் 2025 இல் Music Concert சென்று இருந்தேன். அங்கு நான் கவனித்த விஷயங்களை வைத்து தான் கூறுகிறேன், பெரும்பாலும் இந்த இசை கச்சேரியில் பங்கேற்கும் ரசிகர்கள் மேல் தட்டு மக்களாக தான் இருப்பார்கள். ஏனென்றால் இந்த இசை கச்சேரிகள் குறைந்தது 5,000 முதல் 20,000 வரையிலான விலை வைத்து டிக்கெட்களை விற்கிறது. இதில் குறைந்தபட்ச விலையான அந்த ஐந்தாயிரத்தை எடுத்துக் கொண்டால் கூட இந்தியாவில் ஒரு சராசரி நடுத்தர அல்லது ஏழை குடும்ப மாதவருமானம் 10,000-ல் இருந்து 15,000 வரை தான். இதில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்க யோசித்துக் கூட அவர்களால் பார்க்க முடியாது. அதே சமயம் ஒரு இசைக் கச்சேரியில் முதலீடு செய்யப்படும் பொருள் செலவு மிகவும் அதிகம் அதனுடன் இந்த ஐந்தாயத்தை வைத்து பார்க்கும் போது பெரிய தொகை இல்லை என்று தான் தோன்றும். ஆனால் அதையெல்லாம் மக்களிடம் புரிய வைக்க முடியாது. இருப்பினும் விலை ரீதியாகவும் சரி, சில பல மாற்றங்களுடன் கூடிய Music Concert Business-ஐ Tune Glitz கண்டிப்பாக தோற்றுவிக்கும்.
Indie கலைஞர்களுக்கான சிறந்த Education Instructions: i still remember நான் மெக்கானிக்கல் முடித்துவிட்டு பாண்டிச்சேரியில் லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நா மட்டுமல்ல அங்கு இருக்கும் அனைத்து ஊழியர்களும் அவர்கள் புத்தகத்தில் இடம் பிடிக்காத புதிய வேலைகளை தான் செய்து கொண்டிருந்தார்கள். தெளிவுபட சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் படித்த புத்தகத்தை விட நாங்கள் செய்யக்கூடிய வேலை Updated ஆக இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் புத்தகத்தில் இடம் பிடித்த எந்த ஒரு விஷயமும் இன்றைய நடைமுறை மெக்கானிக்கல் உலகத்தில் இல்லை. மற்றும் எனது பல நண்பர்கள் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் சென்று பல நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களும் என்னைப் போன்று படித்ததற்கும் செய்யும் வேலைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருப்பதாக உணர்ந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் நாம் படிக்கும் புத்தகம் அந்த படிப்பினால் கிடைக்கப் போகும் வேலை வாய்ப்பில் செய்யப் போகும் வேலைக்கு எந்த ஒரு அஸ்திவாரமும் கிடையாது. இருப்பினும் எதற்கு இவ்வளவு செலவு செய்து படித்தோம் என்ற கேள்வி வேதனையுடன் உருவாகும். ஒரு கட்டத்திற்கு மேல் மனதை சாந்தப்படுத்த, செலவு செய்து படித்த படிப்பு ஒரு டிக்கெட் என்று நினைத்துக் கொண்டேன். இது மெக்கானிக்கல் படிப்புக்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து படிப்புகளும் இப்படித்தான் இருக்கிறது. என நான் நம்புகிறேன். ஆகையால் என்ன வேலை செய்ய நாம் விரும்புகிறோமோ அந்த வேலையை எப்படி செய்வது என்பதை விளக்கக் கூடிய படிப்பை தான் படிக்க வேண்டும். அந்த வகையில் நான் செலவு செய்து இசையை கற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. அதனால் இணையதளத்தின் வாயிலாக பத்து வருடத்திற்கு மேல் நேரத்தை செலவு செய்து ஓரளவிற்கான இசைஞானத்தை பெற்றேன். ஒருவேளை சரிவர என்னுடைய பொருளாதார நிலைக்கு ஏற்ற இசை கல்லூரிகள் இருந்திருந்தால் இந்தப் பத்து வருட காலகட்டம் குறைந்திருக்கலாம். அதனை முன்னிறுத்தி இசை கலைஞராக விரும்பும் அனைத்து கலைஞர்களுக்கும் சரியான வழிநடத்தலில் Education Instructions Tune Glitz உருவாக்கும்.
Tune Glitz Movie Production Companie: வெறும் வாய் வார்த்தையில் சினிமாவில் இருந்து பாடல்களை கருவறுக்க வேண்டும் எனக் கூறி புரட்சியில் ஈடுபட்டால் மட்டும் போதாது. மாற்றத்திற்கான முதல் அடியையும் நாம் தான் எடுத்து வைக்க வேண்டும். அந்த வகையில் மக்கள் மத்தியில் திரைப்படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாடல்கள் இல்லாமல் அறிமுகப்படுத்தினால் மட்டும்தான் அதைப் பார்த்து மற்ற திரைப்பட நிறுவனங்களும் பாடல்களை பயன்படுத்துவதை குறைக்க தொடங்குவார்கள். அந்த வகையில் Tune Glitz பாடல்கள் இல்லாத உண்மையான சினிமாவை மக்களுக்காக உருவாக்கும் புரொடக்ஷன் கம்பெனியை நிறுவ போகிறது.
முடிவுரை:
மேற்கண்ட அனைத்து விஷயங்களும் இன்றைய சூழ்நிலையில் எனது கனவாக இருக்கலாம். ஆனால் நாளைய கலைஞர்களின் எதிர்காலம் இந்தக் கனவில் தான் ஒளிந்திருக்கிறது. அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்றால் இந்த கனவுகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்ற வேண்டும். Tune Glitz இசை கலைஞர்களுக்கான ஒரே ஸ்தாபனம், அவர்களுக்கான புரட்சி கழகம், நாளைய எதிர்காலம்.


ConversionConversion EmoticonEmoticon